காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு
காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு
சென்னையில் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தி சீர்வரிசை செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில், பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அண்ணா சாலை காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வருபவர் ஷில்பா.
7 மாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு காவல் நிலையத்திலேயே சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். வீடுகளில் குடும்பத்தினர் செய்வது போன்றே, சீர்வரிசைகள் கொடுத்து வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments