வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும்-சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும்-சென்னை வானிலை ஆய்வு மையம்
,
தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதம் அதிகமாக நீடித்து வந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலுமாக விலகும் எனவும் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பின் போது, “வரும் அக்டோபர் 17 முதல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், ராயசீலா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வளிமண்டலத்தில் 1.5 கிலோமீட்டர் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
Comments