முதியோர் இல்லத்தில் தீபாவளி
தமிழ் நாடு மூத்த குடிமக்கள் சங்கம் கொண்டாடிய தீபாவளி பண்டிகை
சென்னை ஜெய்நகரிலுள்ள தமிழ் நாடு மூத்த குடிமக்கள் சங்கம் ஒரு மிக நல்ல தொண்டு சங்கமாக செயல்பட்டு வருகிறது, இச்சங்கத்தில் தற்போது 3000த்துக்கும் மேல் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கம் மூத்த குடிமகன்களுக்கு செய்து வரும் சேவை போற்றுவதற்குரியது, அவர்களுடைய தேவைகளை அறிந்து அவ்வப்போது மாநில, மைய்ய அரசுகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்து உத்தரவுகளை பெற்று நடைமுறைபடுத்தி
அவர்களுக்கு சேவை செய்து வருகிறது.
இ ந்த சங்க உறுப்பினர்கள் சொந்த பந்தங்களின் எந்த உதவியும் வேண்டாமல் தாங்களாகவே மூத்த குடிமகன்களுக்கு பல சேவை உதாரணமாக மருத்துவ முகாம் மற்றும் இதர சேவைகளை செய்து வருகிறார்கள்.
இதற்காக அவர்கள் உள் நாடு மற்றும் அயல் நாடுகளுக்கும் சென்று அங்குள்ள மூத்தகுடிகன்களின் இல்லங்களுக்கு சென்று சேவை செய்து வருகின்றார்கள் .அந்த சங்கம் ELDERS என்ற மாதந்திர பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறது அந்த பத்திரிகை மூலம் உலகுக்கு இந்த சங்கத்தின் சேவையும் மற்றும் முத்த குடிமகன்களின் நிலை பற்றி தெரிவித்து உதவியும் பொதுமகக்களிடம் பெற்று வருகிறது
இந்த சங்கத்தின் தலைவராக தற்போது திரு Thiru.P.Kalimuthu.IPS(Rrtired)former DGP அவர்கள் செயல்பட்டு வருகிறார். Thiru.D.Rajasekaran.IRS(Retired ) Former Jt Commissioner.Income Tax Dept. அவர்கள் பொதுச்செயலாளராகவும் and Thiru P.S.Thirugnanam Additional Registrar of Coop Societies (Retired )சங்கத்தின் மற்றொரு செயலராவும் செயல்பட்டு வருகிறார்கள் .இந்த சங்கத்தை நிர்வகிக்க ஒரு உயர் மட்ட குழுவும் உள்ளது
இந்த சங்க உறுப்பினர்கள் இந்த வருட தீபவாளியை சென்னை அம்பத்துர் திருமுல்லைவாயில் சாய் ராம் முதியோர் இல்லம் சென்று அங்கு ஆதரவற்ற முதியோர் களுக்கு உணவு உடை முதலியன வழங்கி தீபாவளிப்ண்டிகையை அவர்களுடன் கொண்டாடினார்கள்
வாழ்க அவர்களது தொண்டு!
வளர்க இச்சங்கத்தின் சேவை!
Comments