திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை
சென்னை வானிலை மையம் .
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மணப்பாறை பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகிறோம்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது என கூறப்பட்டு உள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் இவ்வாறு தெரிவிக்கிறது:
Comments