15 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரூ.7,176 கோடி முதலீடு; 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு:: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது

முதல்-அமைச்சர் எடப்பாடி முன்னிலையில் 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .


 


,


 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


 


முதன்மை மாநிலம்


 


தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.


 


அந்த வகையில், புதிய தொழில் திட்டங்களை தொடங்கிட 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.


 


இதன் விவரம் வருமாறு:-


 


* கோயம்புத்தூரில் உள்ள ஆர்.கே.ஜி. தொழில் பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்.ஏ.எச்.எல்.இ. எல்க்ட்ரிக் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்டாட்டர் மோட்டார்ஸ் மற்றும் கண்ட்ரோலர் உற்பத்தி திட்டம்


 


தகவல் தொடர்பு சேவை


 


* சென்னை, சோழிங்கநல்லூரில், 336 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இன்போசிஸ் நிறுவனத்தின், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சேவைத் திட்டம்.


 


* திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மஹிந்திரா தொழில் பூங்காவில், 79 கோடியே 82 லட்சம் ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டு நிசெய் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் மின்சார பணிக்கான உபரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.


 


காற்றாலை டர்பைன்


 


* காஞ்சீபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் - வடகால் தொழில் பூங்காவில், 69 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த யங்வா டெக் நிறுவனத்தின் மின்சார வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.


 


* காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம், ஹிரானந்தானி கிரீன் பேஸ் இண்டஸ்டிரியல் அண்டு லாஜிஸ்டிக்ஸ் பார்க்-ல் 626 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வெஸ்டாஸ் நிறுவனத்தின் காற்றாலை விசையாழி (டர்பைன்) உற்பத்தி திட்டம்.


 


* தூத்துக்குடி மாவட்டம், மேலகரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் காற்றாலை விசையாழி உற்பத்தி திட்டம்.


 


நூற்பாலை


 


* திண்டுக்கல் மாவட்டம், கன்னியாபுரத்தில் 182 கோடியே 50 லட்சம் ரூபாய் முதலீட்டில், 450 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அம்பிகா காட்டன் மில்ஸ் நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள் மற்றும் நூற்பாலை உற்பத்தி திட்டம்.


 


* சென்னை, எண்ணூரில் 1,529 கோடியே 57 லட்சம் ரூபாய் முதலீட்டில் 6,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வெங்கடேஷ் கோக் எப்.டி.டபுள்யூ.இசட். நிறுவனத்தின் சிறப்பு வர்த்தக கிடங்கு மண்டல திட்டம்.


 


* எஸ்.எச்.வி. எனர்ஜி நிறுவனத்தால், 590 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோயம்புத்தூர் - கள்ளிப்பாளையத்தில் நிறுவப்படவுள்ள எல்.பி.ஜி. பாட்டலிங் பிளாண்ட் மற்றும் தூத்துக்குடியில் நிறுவப்படவுள்ள எல்.பி.ஜி. இம்போர்ட் டெர்மினல் எக்ஸ்பான்சன் திட்டங்கள்.


 


சிறப்பு வர்த்தக கிடங்கு


 


* திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 292 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் என்.டி.ஆர். இன்ப்ராஸ்ரக்சர் நிறுவனத்தின் சிறப்பு வர்த்தக கிடங்கு, உள்கட்டமைப்பு மண்டலம் திட்டம்.


 


* காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மண்ணூரில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜெ மெடாடி பிரி டிரேட் சோன் நிறுவனத்தின் சிறப்பு வர்த்தக கிடங்கு மண்டலம் திட்டம்


 


* காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 118 கோடி ரூபாய் முதலீட்டில் 391 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பி.எஸ்.எச். ஹவுஸ் ஹோல்ட் அப்ளையன்ஸ் மேனுபேக்சரிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம்.


 


ஆயத்த ஆடைகள்


 


* காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆகிய 3 இடங்களில், 511 கோடி ரூபாய் முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எம்.எம். போர்ஜிங்ச் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.


 


* நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், 390 கோடி ரூபாய் முதலீட்டில் 475 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பி.கே.பி.என். தொழில் நிறுவனத்தின் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் திட்டம்.


 


* வேலூர் மாவட்டம் காட்பாடியில் மூடப்பட்ட தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனத்தை மீண்டும் தொடங்கும் வகையில், மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் குத்தகை அடிப்படையில் 50 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனத்துடன் இணைந்து வெடிமருந்து தயாரிக்கும் திட்டம்.


 


ஆக, மொத்தம், 5,573 கோடியே 89 லட்சம் ரூபாய் முதலீட்டில் 28 ஆயிரத்து 566 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தொழில் திட்டங்களை தொடங்கிட 15 தொழில் நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


 


மாநாட்டில் கையெழுத்திட்ட நிறுவனங்கள்


 


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 121 கோடியே 12 லட்சம் ரூபாய் முதலீட்டில் 1,280 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சில நிறுவனங்களுக்கான வணிக உற்பத்தியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


 


அதன் விவரம் வருமாறு:-


 


* கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், கல்லாப்பாளையம் பகுதியில் 20 கோடியே 12 லட்சம் ரூபாய் முதலீட்டில் 580 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிஸ்வின் புட்ஸ் நிறுவனத்தின் கோதுமை மாவு அரைக்கும் ஆலை.


 


* ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில் 39 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜே.எஸ். ஆட்டோகாஸ்ட் நிறுவனத்தின் எந்திர வார்ப்பு தொழிற்சாலை.


 


* காஞ்சீபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் - வடகால் தொழிற்பூங்காவில் 62 கோடி ரூபாய் முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐ.டி.டபுள்யூ. இந்தியா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை.


 


அடிக்கல் நாட்டப்பட்ட நிறுவனங்கள்


 


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 1,250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 15,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சில நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


 


அதன் விவரம் வருமாறு:-


 


* காஞ்சீபுரம் மாவட்டம், சிப்காட் - சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவுள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப திட்டம்.


 


* திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் - செய்யாறு தொழில் பூங்காவில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவுள்ள சுவியிங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனத்தின் கட்டுமான உபகரணங்கள் தயாரிக்கும் திட்டம்.


 


மேலும், சிப்காட் தொழிற்பூங்காக்களில் தொடங்கப்படும் பல திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


 







      •  





  • -


 


உற்பத்தி திட்டங்கள்


 


காஞ்சீபுரம் மாவட்டம், சிப்காட், வல்லம் - வடகால் தொழிற்பூங்காவில் 107 கோடியே 58 லட்சம் ரூபாய் முதலீட்டில் 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவுள்ள சுகாமி பிரிசிசன் இங் இந்தியா நிறுவனத்தின் சி.என்.சி. மெஷின் உபகரணங்கள் தயாரிக்கும் திட்டம்.


 


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை - சிப்காட் தொழிற்பூங்காவில் 64 கோடியே 62 லட்சம் ரூபாய் முதலீட்டில் 130 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவுள்ள அலாக் மாஸ்டர்பாச்சஸ் நிறுவனத்தின் உற்பத்தி திட்டம்;


 


திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் செய்யாறு தொழில் பூங்காவில் 58 கோடியே 50 லட்சம் ரூபாய் முதலீட்டில், சுமார் 350 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவுள்ள கல்வா டிகாபார்ட்ஸ் நிறுவனத்தின் பிளாஸ்டிக் மோல்டிங் மற்றும் குரோம் பிளேட்டிங் உற்பத்தி திட்டம்.


 


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொழில் துறை சார்பில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 3 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடக்கம், 5 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மூலமாக மொத்தம் 7,175 கோடியே 71 லட்சம் ரூபாய் முதலீடுகளும், 45 ஆயிரத்து 846 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பும் தமிழ்நாட்டில் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி