15 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரூ.7,176 கோடி முதலீடு; 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு:: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது
முதல்-அமைச்சர் எடப்பாடி முன்னிலையில் 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் . , இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதன்மை மாநிலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில், புதிய தொழில் திட்டங்களை தொடங்கிட 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. இதன் விவரம் வருமாறு:- * கோயம்புத்தூரில் உள்ள ஆர்.கே.ஜி. தொழில் பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்.ஏ.எச்.எல்.இ. எல்க்ட்ரிக் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்டாட்டர் மோட்டார்ஸ் மற்றும் கண்ட்ரோலர் உற்பத்தி திட்டம் தகவல் தொடர்பு சேவை * சென்னை, சோழிங்கநல்லூரில், 336 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில